Sunday, June 28, 2015

Sam(min)sara sagaram

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…..

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன

 வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து 

உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா 

சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் 

டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

***************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

************************
கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய 

வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

******************************
கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் 

போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் 

நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

***********************
கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட 

இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா 

இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம 

தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

*************************
கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே 

மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல 

இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

*****************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் 

இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

************************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு 

தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

***********************************
இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அதாங்க…..நம்ம ஆளு(கணவன்) 

என்னம்மா என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ!!

ஆமாம், உங்க வீட்ல எப்படி?

***************************************************************************************************************

There is this saying that "Women marry men hoping that he will change and men marry women hoping they won't". But then, women are forced to change due to circumstances(work, kids etc.) while no force ever work on men!! ;-)

If Aadha completes a decade, does it make a poora?!! :) 

5 comments:

Me said...

I don't know to read tamil. I am assuming it is your anniversary! If yes, congratulations!!!

preethi said...

ennama ippdi panreengale ma!!! :) good read..i can definitely relate to that ;)

Me too said...

me, no Tamil translators around? Anniversary, yes, blog-anniversary!

preethi, I had to share it!

TTM said...

Maximum kudos for your perserverance and never-say-die spirit. Ten years with blogspot is no small feat :-) Thanks for the many thought-provoking posts, well deserved achievement. It is a pity though that good writing is dead now with everyone moving to shitty 1-line apps and critical analysis is a dead art. Please keep writing.

Me too said...

TTM, perseverence and me? Wow, that's the greatest compliment!! I guess, we do get wiser with age!! If not for you and 'me', I wouldn't have any pulled on for so long! Hopefully, you'll resurrect your blog too!